Sunday, March 29, 2015


ஆண்ட்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலியவன்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள மற்றொரு படமும் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கி வரும் 'தரமணி'' என்ற படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஐ.டியில் பணிபுரியும் ஊழியராக ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகன் வசந்த் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன
ஜெ.சதீஷ்குமார் மற்றும் ராம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியுள்ளதாகவும், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிற

0 comments:

Post a Comment