Sunday, March 29, 2015


உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்துள்ளார். 

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால், போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் கோஹ்லி விளையாடுவதை நேரில் காண அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்து ஷாக் கொடுத்தார் கோஹ்லி. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கோஹ்லிக்கு பதிலாக அவரது காதலி அனுஷ்கா மீது திரும்பியது.

அவர் தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்து வருகின்றனர். இதற்கு எதிராக ‘பாவம், அனுஷ்கா என்ன பண்ணும்' என அனுஷ்காவுக்கு ஆதரவாகவும் பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார் கோஹ்லி. மும்பை விமான நிலையம் வந்திறங்கிய அவருடன் அனுஷ்காவும் வந்திருந்தார்.

அனுஷ்காவின் கையைப் பிடித்தபடி, கோஹ்லி விமான நிலைய வளாகத்தில் நடந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment