
முன்னதாக, பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய மூவரில் யாருக்கு சிலை வைக்கலாம் என்று வாக்கெடுப்பு நடைபெற்றது. 2,25,000 ஓட்டுகளுடன் கத்ரீனாவிற்கே சிலை வைக்க அதிக ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். பாலிவுட்டின் 7வது நபராக கத்ரீனாவிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கத்ரீனா நடனமாடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
காத்ரீனா மற்றும் கரீனா இரண்டு சிலைகளிலும் யார் பார்க்க ஹாட்டாக இருக்கிறார்கள் என்று ரசிகர்களிடம் கேட்கப்பட்டது. அதிலும் கத்ரீனாவே வென்றிருக்கிறார். கத்ரீனா 55% மற்றும் கரீனா கபூர் 45% ஓட்டுகளே பெற்றுள்ளனர்.

தன்னுடைய சிலையை தானே திறந்து வைத்த மகிழ்ச்சியை விட சல்மான்கான் தன்னை வாழ்த்தியதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கத்ரீனா. என்னை விட மிகப்பெரிய நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்று கத்ரீனாவை பாராட்டியிருக்கிறார் முன்னாள் காதலனான சல்மான்கான். தற்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் கத்ரீனா கைஃப்.
20 சிற்ப கலைஞர்களின் கலை வண்ணத்தில் 1,50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில் உருவாகியிருக்கிறது இந்த மெழுகுசிலை. சூப்பர்ல..
20 சிற்ப கலைஞர்களின் கலை வண்ணத்தில் 1,50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில் உருவாகியிருக்கிறது இந்த மெழுகுசிலை. சூப்பர்ல..
0 comments:
Post a Comment