Sunday, March 29, 2015


இசைஞானி இளையராஜாவின் இளையமகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜா, நடிகை மோனிகா ஆகியோர்கள் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து செய்தி அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் மேலும் ஒரு நடிகர் இஸ்லாம் மதத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

போக்கிரி, கில்லி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ள கராத்தே ராஜா சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகள் அவரை வெகுவாக கவர்ந்ததால் அவர் அந்த மதத்தில் தன்னை இணைத்து கொண்டதாக அவருடைய நண்பர்கள் வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது கராத்தே ராஜா தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஆறு படங்கள் வரை நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment