Monday, March 30, 2015

samantha

விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் சமந்தா. இதை தொடர்ந்து விஜய் 59வது படத்திலும் இவரே கதாநாயகி.

சின்ன இயக்குனர்கள் என்றாலும் சரி பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் சரி முழு கதையையும் கேட்ட பிறகுதான் கால்ஷீட் கொடுப்பார்கள் நடிகர், நடிகைகள். ஆனால் சமந்தா விக்ரமுக்கு ஜோடியாக விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக சமந்தாவிடம் தொடர்பு கொண்டது உடனே ஒப்புக் கொண்டாராம்.
காரணம், விஜய் மில்டன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான கோலிசோடா படம் சமந்தாவிற்கு மிகவும் பிடித்த படமாம். படத்தை பார்த்தவுடன் விஜய் மில்டனுக்கு போன் சேய்து வாழ்த்து தெரிவித்தாராம்.
அதனால்தான் விஜய்மில்டனே தன்னை நடிக்க அழைத்தபோது கதை கேட்க வேண்டும் எனறு சமந்தாவுக்கு தோன்றவில்லையாம். கண்டிப்பாக அவர் தனக்கு நல்ல கதாபாத்திரத்தைதான் தருவார் என்ற நம்பிக்கையில் கால்சீட்களை தாராளமாக அள்ளிக்கொடுத்தாராம் சமந்தா.

0 comments:

Post a Comment