Saturday, March 28, 2015

tamannaah

கார்த்தி, தமன்னா இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் கோலிவுட்டின் ராசியான ஜோடியாக வலம் வந்தனர். திரைக்கு பின்னும் இவர்களது கெமிஸ்ட்ரி ஓர்க் ஆகி விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் திடீரென கார்த்தி வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் காதல் தோல்வியால் தமன்னா தெலுங்கு பக்கம் ஓடியதாக அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியது. இப்போது நாகார்ஜுனா, கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது ஆனால் திடீரென அவர் அப்படத்திலிருந்து விலகி விட்டார்.
அந்த கதாபாத்திரத்திற்காக மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிக்க வைப்பதற்காக தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறதாம். ஒருவேளை தமன்னா சம்மதித்தாலும் கார்த்தி சம்மதிப்பாரா என்பதும் கேள்விதான்.

0 comments:

Post a Comment