Sunday, March 29, 2015

உடலை அழகுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் அக்ஷாரா - Cineulagam
ஒரு வெற்றி இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவிற்குள் வந்து மணிரத்தினம் உதவி இயக்குனராக எல்லாம் பணியாற்றியவர் அக்ஷாரா ஹாசன்.
ஸ்ருதிஹாசனுடன் இணைந்து சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்ததால், ஆந்திராவை சேர்ந்த டைரக்டர்களின் கண் அக்ஷாரா மீது விழுந்தது. ஆனால் அப்போது நடிக்க மறுத்த அக்ஷாரா, ஷமிதாப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது நடிக்க மறுக்க முடியவில்லையாம்.
இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்த அக்ஷரா திடீரென நடிகையாக மாறியதை அடுத்து தொடர்ந்து ஸ்ருதிஹாசனை போல நடிகையாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
எனவே தன்னுடைய உடை மற்றும் சிகை அலங்காரங்களை மாற்ற பிரத்யேகமாக ஒரு பாடி பிட்னஸ் நிபுணரை நியமித்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment