Sunday, March 29, 2015



ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ்  நாளை,  மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கதம் கதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் "சதுரங்க வேட்டை' படம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து  கேமராமேனாக பல படங்களில் கமிட்டாகியிருந்ததால், "கதம் கதம்" என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்க ஒத்துக்கொண்டார், நடராஜ்.

அந்த படத்தில் முதலில் நந்தா தான் முக்கிய கதாநாயகனாக கமிட்டாகியிருந்தார். அனால் திடீரென  நட்டி படத்துக்குள் வந்ததால் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு, சதுரங்க வேட்டை போன்றே இந்த படமும் வெற்றி பெறும் என்று, பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இருப்பினும்  நட்டிக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்து  பல டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்ல அழைக்கின்றனராம். அதனால் தற்போது விஜய்யின் புலி பட வேலைகளில் விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவர், நேரம் கிடைக்கும்போது கதை கேட்கிறாறாராம்.

குறிப்பாக, தனது ஸ்டைலுக்கேற்ப 'நெகட்டிவ் வேடம்' என்றால் அந்த கதையை ஆர்வத்துடன் கேட்டு விட்டு, புலி முடிந்த பிறகு மேற்கொண்டு பேசுவோம், என்று அந்த டைரக்டர்களை வழியனுப்பி வைக்கிறாராம்.

0 comments:

Post a Comment