
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. சில அதி தீவிர ரசிகர்களும் உள்ளனர்.
ரஜினியை கடவுளாக பார்க்கும் ரசிகர்களும் இங்கு உண்டு, அந்த வகையில் ரஜினி தான் உலகம், ரஜினி சொன்னா தான் மருந்து சாப்டுவேன் , ரஜினிக்கு பிறகு தான் அம்மா, அப்பா என்று சொல்லும் ஒரு ரசிகர் இருக்கிறார் என்றால் அவர் தான் ரஜினி பாலா.
சிறு வயதிலேயே மூளை வளர்ச்சி இழந்த ரஜினி பாலாவுக்கு தற்போது வரை அவர் மூளையில் ரஜினி மட்டுமே இருக்கிறார். ரஜினி மாதிரி நடந்து காட்டுவதும், ரஜினி ஸ்டைல் செய்து காட்டுவதும் என ஒவ்வொரு அசைவும் அவருடன் ரஜினி இருக்கிறார். இப்படி ஒரு ரசிகர் ரஜினிக்கு இருக்கிறார் என்ற தகவல் ஒரு பிரபல வார இதழ் முலம் ரஜினிக்கு செல்ல உடனே பார்க்க வேண்டும் என்று தலைவர் சொன்னாராம்.
கடந்த வாரம் இத்தகவல் ரஜினி பாலா குடும்பத்துக்கு தெரிவிக்க சந்தோசத்தின் உச்சிக்கே போனார்கள். மறுநாள் ரஜினி பார்க்க குடும்பமே ரஜினி விட்டுக்கு சென்றது. ரஜினியை பார்த்தவுடன் ரஜினி பாலா தலைவா என்ற கத்தலுடன் உடனே காலில் விழுந்தார். அதன் பிறகு ரஜினி பாலா பற்றி அவரின் அம்மாவிடம் நலம் விசாரித்தார்.
ரஜினி பாலாவின் ஒவ்வொரு அசைவையும் நிதானமாக உட்கார்ந்து ரசித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி பாலா அண்ணாமலை வசனம் பேசி நடித்து காட்டி போது ரஜினி அவரின் ரசிகராக மாறி கை தட்டினர்.
கண்டிப்பாக ரஜினி பாலா ஒரு வியக்கத்தக்க ரசிகர் தான்.
0 comments:
Post a Comment