Monday, February 23, 2015


சினிமாவில் 90களில் முன்னணியில் இருந்த ஹீரோ, ஹீரோயின், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சந்திப்பு கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் நடைபெற்றது. எண்பதுகளில் பிரபலமாக இருந்த நடிகர்கள்- நடிகைகள் சந்திப்பு ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. சென்னையில் பண்ணை வீடு அல்லது முக்கியமான இடங்களில் அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இந்த சந்திப்பில் ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், ராதிகா, பூர்ணிமா, நதியா, உட்பட பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.


கடந்த சில வருடங்களாக தனிப்பட்ட முறையில் சந்தித்து வந்ததனர். ஆனால், இந்த ஆண்டு அதை ஒரு விழாவாக நடத்தி, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள். ஆனால், அந்த விழாவில் இந்த ஆண்டு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதே போல 90-களில் அறிமுகமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்களின் சந்திப்பை நடத்த இயக்குனர் சுந்தர்.சியும் நடிகை மீனாவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சந்திப்பில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், சுந்தர் .சி, வெங்கட்பிரபு, பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர்கள் விஜய், சூர்யா, ஜெயராம், அரவிந்த்ஸ்வாமி, என இன்றைக்கும் இளம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள நடிகர்கள் பங்கேற்றனர். அஜீத், ஷாலினி ஜோடி ஏனோ இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை

90களில் தென்னிந்திய சினிமா உலகில் கனவுக்கன்னிகளாக வலம் வந்த நடிகைகள் சிம்ரன், ரோஜா, மீனா, ஜோதிகா, சங்கீதா, மகேஸ்வரி, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்த இந்த நட்சத்திரங்கள், தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். கேக் வெட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதுபற்றி கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, ‘இது முதல் சந்திப்பு. முன்னோட்டம் மாதிரிதான். இன்னும் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அடுத்து நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்' என்று கூறினார்.





0 comments:

Post a Comment