Wednesday, February 25, 2015


தனுஷ் நடித்து வெளிவந்துள்ள அனேகன் படம் பத்து நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட தனுஷ் உட்பட பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

படம் வெளியான முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலும், இரண்டாவது நாளில் மொத்தமாக 20 கோடி ரூபாய் வசூலும் பெற்றதாக ஏற்கெனவே அறிவித்தனர். யாரெல்லாம் படத்தின் வசூலைப் பற்றி அதிகமாக குறிப்பிடுகிறார்களோ, அந்தச் செய்தியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட ஆரம்பித்திருக்கிறாராம் தனுஷ்.

திரையரங்க வட்டாரங்களில் விசாரித்த போது இதுவரை அனேகன் படம் தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்திருக்கும் என்று சொல்கிறார்களாம். இப்படம் வெளியான பல தியேட்டர்களிலும் வரும் 27ம் தேதி முதல் காக்கி சட்டை படம் திரையிடப்பட உள்ளதாம்.

தனுஷின் முந்தைய படமான வேலையில்லா பட்டதாரி படம்தான் இதுவரை வெளிவந்த தனுஷ் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம். ஆனாலும், ஒரு பரபரப்புக்காக இது போன்ற வதந்திகளைக் கிளப்பி தங்களுக்குத் தாங்களே படத்தை மார்க்கெட்டிங் செய்து வருகிறார்களாம் அனேகன் குழுவினர்.

0 comments:

Post a Comment