தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. தன் நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனதில் வலம் வந்த இவர் இடையில் பல அரசியல் காரணங்களால் காணாமல் போனார். நீ..ண்ட இடைவேளைக்கு பின்னர் இதோ… வந்துட்டார்யா… வந்துட்டாரு என்பது போல தெனாலிராமன் படத்தில் நடித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் வெற்றி பெறவில்லை. வடிவேலு அடுத்த இன்னிங்ஸை தொடங்கினால் இணைந்து கொள்ளலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் படத்தின் முடிவை கண்டு ஜகா வாங்கிவிட்டனர். விடுவாரா வடிவேலு-?… ச்சும்மா… கிர்க்குன்னு… கிர்க்குன்னு…. அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார்.
தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜூடன் மீண்டும் இணைந்து எலி படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் தயாரிப்பாளர்தான் சரியாக கிடைக்கவில்லையாம். எனவே, தனது சொந்த ஊரான மதுரையில் இருக்கும் ஒரு நண்பரை தயாரிப்பாளராக்கி விட்டார் வடிவேலு. இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் ரூ. 15 கோடியில் தயாரிக்கிறார்கள். வடிவேலுவுக்கு மட்டும் ரூ.7 கோடி சம்பளமாம்.
மேலும், இதுநாள்வரை தன்னுடன் காமெடி செய்து வந்த நடிகர்களை தவிர்த்து விட்டாராம். நடிகர் கிங்காங் தவிர யாரையுமே சேர்த்துக்கொள்ளவில்லை. பழைய நடிகர்களை சேர்த்தால் பழைய பாணி ஒட்டிக் கொள்ளும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்தாராம் இந்த தெனா(எ)லி வடிவேலு.

0 comments:
Post a Comment