விஷால் ஒரு நல்ல நடிகர் என்ற பெயருடன் சேர்த்து ஒரு வெற்றி தயாரிப்பாளர் என்ற பெயரையும் எடுத்துவிட்டார். அதேபோல் தற்போது இயக்குநர் லிங்குசாமியுடன் இணையவிருக்கும் சண்டைக்கோழி 2 படத்தையும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தான் தயாரிக்கப்போகிறது. ஆனால் இந்த முறை படத்தை துவங்கும்போது ரிலீஸ் தேதியை அறிவிக்கமாட்டேன் என்று ஏற்கனவே விஷால் தெளிவாக கூறிவிட்டார். ஆனால் மனதளவில் இந்த தேதிதான் என்று நினைத்து அதை அவரின் நெருக்கமானவர்களிடம் மட்டும் சொல்லிக் கொள்கிறாராம்.
லிங்குசாமியுடன் இணையும் சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டிருக்கிறார்களாம், அதுமட்டுமின்றி படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷாலின் இந்த முடிவுக்கு ஒரு செண்ட்டிமெண்ட் காரணம் இருக்கிறது, இதே தீபாவளிக்குத்தான் விஷாலின் பாண்டியநாடு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது, அதேபோல் சண்டைக்கோழி 2 படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவேண்டும் என்று நினைத்துள்ளாராம்.
0 comments:
Post a Comment