Saturday, February 28, 2015

கோலிவுட்டில் வில்லனாக முகம் காட்டிய முன்னணி ஹீரோக்கள்-ஸ்பெஷல் - Cineulagam
தமிழ் சினிமாவில் ஹீரோ இந்த உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் வில்லன்கள் தான். அவர்கள் ஹீரோக்களை தொந்தரவு செய்யவில்லை என்றால் எங்கு இருக்கிறது ஹீரோக்களின் மாஸ். அப்படியிருக்க நம் ஹீரோக்களே, வில்லன்களாக நடித்து மிரட்டிய படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.
 
ரஜினி 
இன்று இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்தவர் தான். அதிலும் குறிப்பாக இவர் நடித்த 16 வயதினிலேயே படம் ரஜினியை மிகவும் கொடூர வில்லனாக சித்தரித்தது. இதில் இடம்பெற்ற ‘இது எப்படி இருக்கு’ வசனம் இன்றளவும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 
கமல் 
கமல் பெரும்பாலும் எப்போதும் ஹீரோ கதாபாத்திரத்தில் தான் நடிப்பார். ஆனால், இவர் நடிப்பில் வெளிவந்த தசவதாரம் படத்தில் 10 வேடங்களில் ஒன்றான ப்ளச்சர் கதாபாத்திரத்தில் வெளி நாட்டுக்கார வில்லனாக மிரட்டியிருப்பார். இக்கதாபாத்திரத்தில் ஒரு உலகளாவிய தீவிரவாதியாக படம் முழுவதும் நம்மை அச்சத்தில் உறைய வைத்திருப்பார்.
 
அஜித் 
அஜித்திற்கு எப்போதும் நெகட்டிவ் கேரக்டர் கொஞ்சம் பலம் தான். அந்த விதத்தில் இவர் நடித்த வாலி திரைப்படத்தில் பேசாமலேயே, படம் பார்த்த அனைவரையும் பேச வைத்து விட்டார். இதை தொடர்ந்து இவரின் 50வது படமான மங்காத்தாவிலும், வில்லனாக நடித்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
 

விஜய் 

விஜய் ப்ரியமுடன் படத்தில் வில்லனாக நடித்தார். இது மட்டுமின்றி அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு விஜய்யில் ஒருவர் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே தோல்வியை தான் பெற்றது.

 
சத்யராஜ் 
தகடு தகடு, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்ரீயே என இவர் வில்லனாக திரையில் தோன்றி பேசிய வசனங்கள் எல்லாம் அதிரி புதிரி தான். 6அடி உயரம், நல்ல கலர் என ஹீரோ மெட்டிரியல் இருந்தாலும் காக்கிசட்டை, அமைதிப்படை, வில்லாதி வில்லன் என இவர் வில்லனாக நடித்த படங்கள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அருண் விஜய்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதை, விட வில்லனால நடித்தால் எளிதில் மக்களை சென்று அடையளாம் என்பதற்கு அருண் விஜய் ஒரு சான்று. நீண்ட நாட்களாக எப்படியாவது சினிமாவில் ஜெயித்துவிட வேண்டும், என்று போராடி கொண்டிருந்த தருணத்தில் என்னை அறிந்தால் படம் இவருக்கு மிகவும் கைகொடுத்தது.
இவர்கள் மட்டுமின்றி அர்ஜுன், ஆர்யா, ஜீவன் என பல நடிகர்கள் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment