Thursday, February 26, 2015


விஜய் நடித்த ஜில்லா படத்திற்கு பின்னர்  நடிகை காஜல் அகர்வாலுக்கு வேறு எந்த தமிழ்ப்படமும் ரிலீஸாகாத நிலையில் அவர் நடித்த தெலுங்கு டப்பிங் படம் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் ராம்சரணுடன் காஜல் அகர்வால் நடித்த 'கோவிந்துடு அண்டரிவடிலே' (Govindudu Andarivadele) என்ற திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு 'ராம்லீலா' என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் ராம்சரண்-காஜல் அகர்வால் இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மகதீரா, நாயக், ஆகிய படங்களில் இதே ஜோடி நடித்துள்ளனர். மேலும் ராம் சரண் நடித்த எவடு' படத்திலும் காஜல் அகர்வால் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணவம்சி இயக்கிய குடும்ப செண்டிமெண்ட் கலந்த இந்த படத்தில் தமிழில் பிரபலமான பிரகாஷ்ராஜ், ரகுமான், கமாலினி முகர்ஜி ஆகியோர்களும் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது தனுஷுடன் மாரி என்ற படத்திலும் சுசீந்திரன் இயக்கும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment