Wednesday, February 25, 2015

சிம்புதேவன் இயக்கி வரும் ‘புலி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.
இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன் நடிக்க ஸ்ரீதேவி, பிரபு, ‘நான் ஈ’ சுதீப், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தை பிரம்மாண்டமான, முறையில் பி.டிசெல்வகுமார், தமீன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். 75 சதவீத படப்பிடிப்பு முடிந்தும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களுடன் நிறைவடைகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கேரளா செல்லவிருக்கின்றனர். கேரளாவிலுள்ள மலை பிரதேசமான வாகமண் என்ற இடத்தில் இந்தப் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

0 comments:

Post a Comment