Saturday, February 28, 2015


இணையதளங்களில் நடிகைகளின் முகங்களை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், நடிகைகளின் பெயரில் அவர்களது 

சாயலில் உள்ள பெண்களின் நிர்வாண வீடியோக்களை சில விஷமிகள் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.. முதலில் இணையதளங்களில் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டிருக்கும்போது ஏதேச்சையாக தட்டுப்பட்ட இப்படிப்பட்ட புகைப்படங்களோ, வீடியோக்களா டெக்னாலஜி வளரவளர இப்போது வாட்ஸ்அப் மூலமாக நேரடியாகவே செல்போனுக்கு வர ஆரம்பித்துவிட்டன. 


சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என சொல்லி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மலையாள நடிகையான ரக்சனா நாராயணன்குட்டி என்பவரின் ஆபாச புகைப்படம் வெளியாகி அவருக்கு மட்டுமல்ல, கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரக்சனாவிடம் போன்போட்டு பலரும் அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். 

அவர் உடனே தனது பேஸ்புக் பக்கத்தில், “இது நான் மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள என்னைபோன்ற பல பெண்களும் எதிர்கொண்டுள்ள அவலம் தான்.. தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களையே மதிக்காத இதுபோன்ற நபர்கள், எப்படி அடுத்த வீட்டு பெண்களை மதிப்பார்கள்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் 'ஆமென்', 'புண்யாலன் அகர்பத்திஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ள ரக்சனா, தற்போது பிருத்விராஜ், ஆர்யா நடிக்கும் டபுள் பேரல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment