Saturday, February 28, 2015


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்த ஸ்ரேயா, அப்படத்துக்குப் பிறகு நம்பர் ஒன் கதாநாயகியாகிவிடுவார் என்று 
எதிர்பார்க்கப்பட்டார். பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் செய்த ஒரு தவறு..ஒரே தவறு... அவரது தலை எழுத்தையே மாற்றி எழுதிவிட்டது. 20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலு உடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதோடு, அவரது அத்தியாயம் முடிவுக்கு வந்தது.

தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் முதலானோருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவை வடிவேலு உடன் ஆடிய பிறகு தமிழில் ஒரு ஹீரோவும் அவரை சீண்டவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல்போனதால் கன்னடம், தெலுங்கு பக்கம் போனார் ஸ்ரேயா. விரைவில் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு பை சொல்லிவிடுவார் என்று எதிர்பார்த்தவேளையில், ஒரு ஹிந்திப்படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து இப்போது ஹிந்தியிலும் தற்போது ரீ-மேக் ஆகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். 2 குழுந்தைகளுக்கு அம்மாவாக மீனா நடித்த கேரக்டரில் ஹிந்தியில் ஸ்ரேயா நடிக்கிறார்! த்ரிஷ்யம் படத்தில் இந்த கேரக்டர் முக்கியமானது என்பதால் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ரேயா! நிஷிகாந்த் என்பவர் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தபு நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

0 comments:

Post a Comment