Sunday, March 1, 2015

‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. முப்பதைந்து நாளில் மூணு படம் இயக்கியவர் ஏ.வெங்கடேஷ் என்று தொகுப்பாளர் சொல்ல, ‘ரொம்ப ஷாக்க்க்க்க்காயிட்டேன்’ ஆனார் வெங்ஸ். கில்லாடி படம் எடுத்து நாலு வருஷம் கழிச்சு ரிலீஸ் ஆச்சு. அதற்கப்புறம் நான் இயக்கிய சண்டமாருதம் வந்திச்சு. இப்போ மார்ச் 6 ல் ரொம்ப நல்லவன்டா வருது. ஆனால் மூணு படமும் அடுத்தடுத்து உடனே வர்றது சந்தோஷம்தான். ஆனால் வேற வேற சமயங்களில் எடுத்தது என்றார்.
எந்த பெரிய ஹீரோட்டயும் கதை சொல்ல போக முடியாத சூழ்நிலையில் இருந்தப்போ இந்த படம் இயக்குற வாய்ப்பு வந்தது. மிர்ச்சி செந்திலை ஹீரோவா நடிக்க வச்சுருக்கேன். அவருக்கு ஜோடியா நடிச்சருக்கிற பொண்ணோட சொந்த ஊர் திருவில்லா. அதுதான் நயன்தாராவோட ஊர் என்றார் டைரக்டர் வெங்கடேஷ். (என்னவோ சொல்ல வர்றாருன்னு தெரியுது, ஆனா…?)
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சோனாதான் செம ஷாக் கொடுத்தார் நிருபர்களுக்கு. இந்த படத்தில் எனக்கும் ஒரு ரோல் கொடுத்து நடிக்க வச்சுருக்காங்க. படம் முடிஞ்ச ரெடியானதும் என்னை பார்க்க கூப்பிட்டாங்க. நான் என் போர்ஷன் வரைக்கும்தான் பார்ப்பேன். என்னை கடைசி வரைக்கும் இருக்கணும்னு கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டுதான் படம் பார்க்கப் போனேன். படம் ஓட ஓட முழு படத்தையும் ரசிச்சு பார்த்தேன். படம் முடிஞ்சதும் இந்த படத்தை எங்கிட்ட கொடுத்துருங்க. நான் ரிலீஸ் பண்ணிக்கிறேன்னு சொல்லி, ஒரு விலையும் பேசுனேன். ஆனால் இந்த படத்தை என்னால ரிலீஸ் பண்ண முடியல. காரணம் யார்னு இங்க சொல்லணும்னு தோணுது. ஆனால் வேணாம். எனக்கு வர்ற கோபத்துக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது என்றெல்லாம் பேசிவிட்டு இறங்கினார்.
யாரு அவர்? என்ன காரணம்? என்றெல்லாம் மேடையிலிருந்து கீழே இறங்கிய சோனாவை நிருபர்களில் சிலர் ரவுண்டு கட்டி கேட்க முயல, வேணாம்… இப்ப வேணாம்… சமயம் வரும்போது சொல்றேன். ஆனால் அவனை விடமாட்டேன் என்றபடி கிளம்பினார். நமது யூகத்தின்படி அவர் ஒரு முன்னணி இயக்குனருக்கு தனது நிறுவனத்தில் படம் இயக்க சொல்லி ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்திருக்கிறார். அந்த பணம் இன்னும் திரும்பி வரவில்லையாம். அது இருந்திருந்தால் இந்த படத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாமே என்ற ஆத்திரம்தான் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும்!

0 comments:

Post a Comment