Saturday, March 28, 2015


மஞ்சப்பை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய வெற்றி படங்களை அடுத்து விமல் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் "காவல்". இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் இணையதளங்களில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றது. முதலில் இந்த படத்திற்கு 'நீயெல்லாம் நல்லா வருவேடா" என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் படக்குழுவினர் இந்த டைட்டிலை மாற்றிவிட்டு, 'காவல்' என்ற பெயரில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

விமல், கீதா, சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார். ஆர்.நாகேந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்குனர்கள் சுசி.கணேசன் மற்றும் சீமான் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜி.பிலிம்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே 'ஆர்யா அறிமுகமான 'அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவும், பிரவீன் எடிட்டிங்கும் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment