Sunday, March 29, 2015


தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்த '3' படத்தை அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் 'வை ராஜா வை'. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள இந்த படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, விவேக், டேனியல் பாலாஜி, சதீஷ், காயத்ரி ரகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் பெண்களாலேயே செய்யப்பட்ட படமாக தற்செயலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர்கள் பெண்கள் என்ற நிலையில் இந்த படத்தின் மேனேஜராக பணிபுரிந்தவரும் பெண் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸான இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ், 'கொக்கி குமார்' என்ற கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வை ராஜா வை' படம் ரிலீஸாகும் அதே தேதியில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படமும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment