பிறவியில் இணையும் ஆர்யா-விஷால்-விஷ்ணு
ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு, விக்ராந்த் போன்ற இளையதலைமுறை நாயகர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நட்புடன் இருப்பது மட்டுமின்றி ஒருவர் நடிக்கும் படங்களில் மற்றவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். ஆர்யா நடிக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் விஷாலும், ஜெயம் ரவி நடிக்கும் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் ஆர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றனர் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே.
இந்நிலையில் விக்ராந்த் தற்போது நடித்து வரும் 'பிறவி' என்ற படத்தில் ஆர்யா, விஷால், விஷ்ணு மூவருமே ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க நட்பின் அடிப்படையில் மூவரும் இந்த பாடலில் தோன்றுவதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.
விக்ராந்த்துக்கு சில வருடங்களாக வாய்ப்புகள் இல்லாமல இருந்த நிலையில் விஷால், தன்னுடைய பாண்டியநாடு' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை கொடுத்து அவருடைய ரீ எண்ட்ரிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ராந்த், அரவிந்த் சிங், ராஹுல் வெங்கட், அபினயா, லீமா, பார்வதி நிர்மன், அருள்தாஸ், சரித்திரன் உள்பட பலர் நடித்து வரும் 'பிறவி' படத்தை சஞ்சீவ் என்பவர் இயக்கி வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுஜித் சராங்க் ஒளீப்பதிவு செய்துள்ளார்.

0 comments:
Post a Comment