Saturday, March 28, 2015



கமல்ஹாசனின் இரண்டாவது மகளும் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையுமான அக்ஷராஹாசன், அமிதாப், தனுஷ் நடித்த 'ஷமிதாப்' படத்தில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் ஆகவேண்டும் என்ற கொள்கையில் இருந்த அக்ஷரா திடீரென நடிகையாக மாறியதை அடுத்து தொடர்ந்து சகோதரியை போல நடிகையாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக தன்னுடைய உடை மற்றும் சிகை அலங்காரங்களை மாற்றவும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு கேட்வாக்' நடை நடந்து அசத்திய அக்ஷாரா, இதன்மூலம் தோற்றத்தில் எப்படி அழகாக இருக்க வேண்டும், உடைகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்  என்பதை கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

தற்போது அக்ஷாராவை சுற்றி டயட்டீஷியன், உடற்பயிற்சி வல்லுனர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், அழகு நிபுணர்கள் என ஒரு குழு வட்டமிட்டு வருவதாகவும், அடுத்த படத்தில் கமிட் ஆகும் முன்னர் ஒரு கிளாமரான தோற்றத்திற்கு மாறிவிட வேண்டும் என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் பாலிவுட் செய்திகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment