Saturday, February 28, 2015

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அனுஷ்கா, தற்போது ருத்ரம்மாதேவி, பாஹுபாலி ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். பாஹுபாலி படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலியும், ருத்ரம்மாதேவி படத்தை குணசேகர் என்ற இயக்குனரும் இயக்கி வருகின்றனர். இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஹுபாலி திரைப்படம் வரும் மே மாதம் 22ஆம் தேதி ரிலீஸாகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. இந்நிலையில் ருத்ரம்மாதேவி படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ருத்ரம்மா தேவி படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகும் என்றும், இந்த படத்தை இராம.நாராயணன் அவர்களின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் என்ற நிறுவனம்  ரிலீஸ் செய்யவுள்ளது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

ருத்ரம்மாதேவி, பாஹுபாலி என அனுஷ்கா நடித்த இரண்டு பெரிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


0 comments:

Post a Comment