Saturday, February 28, 2015

தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட முயற்சி ஜீரோ ஒரு பார்வை - Cineulagam
தமிழ் சினிமா என்றாலே காதல், மோதல், சண்டை என பார்த்து வந்த ரசிகர்களுக்கு சமீப காலமாக தான் கொஞ்சம் இடைவேளி கிடைத்துள்ளது. பல புதிய இயக்குனர்கள் தங்கள் திறமைகளை புதிய கதைக்களத்தில் எடுத்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அறிமுக இயக்குனர் சிவா மோகா இயக்கத்தில் மங்காத்தா, மேகா படங்களில் நடித்த அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம் ஜீரோ. இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்துள்ளது.
இந்த டீசரை பார்க்கையில், மெல்லிய காதலுடன் ஆரம்பிக்க, வழக்கமான கதைக்களம் என்று நினைக்கும் தருணத்தில், நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் பல காட்சிகளை காட்டி மிரட்டி விடுகின்றனர்.
இதில் இயற்கைக்கு மாறாக ஒருவருக்கு கிடைக்கும் சக்தி எந்த அளவிற்கு பாதிப்பையும், பயத்தையும் உண்டாக்குகிறது என்பதை தான் காட்டியிருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜீரோ என்றால் அதற்கு மதிப்பு இல்லை என்று நாம் ஒதுக்கி விட முடியாது, அதற்கும் ஒரு ஆழமான மதிப்பு உள்ளது என்பதை இந்த ஜீரோ தெளிவுப்படுத்தும் என்பது போல் தெரிகிறது.
டீசரை பார்க்கும் போதே நம்மை பயத்தில் ஆழ்த்தி விடுகிறார் இயக்குனர், அது மட்டுமின்றி கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்து விடுகிறார். விரைவில் உங்களை மிரட்ட வருகிறது ஜீரோ.
இப்படத்தை பாலாஜி கபா தயாரித்துள்ளார். அஸ்வினுக்கு ஜோடியாக சஸ்விதா நடித்துள்ளார். டீசரில் நம்மை மிகவும் கவர்ந்தது இசை தான், இப்பணியை நிவாஸ்.கே.பிரசன்னா சிறப்பாக செய்துள்ளார்.

0 comments:

Post a Comment