Friday, February 27, 2015


தலைப்பை பார்த்ததும் பதறிவிட்டீர்களா? பொறுமையாக படித்துப் பாருங்கள் தெரியும். புதுமுகம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி நடிக்கும் படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. தலைப்பே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் ஜி.வி. பிரகாஷ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜி.வி. கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு நெஞ்சில் பாய்ந்த குண்டை காண்பித்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.


படத்தில் ஜி.வி. அஜீத் கட்அவுட்டையும், ஆனந்தி விஜய்யின் கட்அவுட்டையும் பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் மாடர்ன் பெண்ணாக வருகிறாராம்.

தான் நடித்த டார்லிங் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிற படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

0 comments:

Post a Comment