சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகிவரும் புலி படத்தை அடுத்து கலைபுலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் நடிக்கிறார் விஜய்.
விஜய்யின் 59வது படத்தை தான் இயக்குவதாக மட்டுமே தெரிவித்திருந்த அட்லீ சென்னையில் இன்று நடைபெற்ற CSK படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறு படங்களை ஊக்குவித்தார். அப்போது தொகுப்பாளினி சார் அடுத்து தளபதிய வைச்சு படம் பண்ணுறீங்க அதை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு துப்பாக்கி படத்தில் விஜய் பேசும் I AM Waiting என்ற டயலாக்கை சொல்லி நழுவினார்.
இதற்கு முன்பு பேசும் போது அட்லீ இப்ப எல்லாம் படத்துக்கு கதை எழுதுறது கூட ரொம்ப ஈஸி ஆனா படத்திற்கு நச்சுனு தலைப்பு கிடைக்கிறது தான் ரொம்ப கஷ்டம் என்று கூறினார், இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது இன்னும் விஜய்59 படத்திற்கு சரியான தலைப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார் அட்லீ.
அதோடு அவரிடம் விஜய்59ல் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா, நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகிறதே அதை பற்றி என்று கேட்டால் மனுஷன் துளிகூட யோசிக்காம இன்னும் அதபத்தி யோசிக்கவே இல்லை என்று பதில் கூறுகிறார்.
மொத்தத்தில் விஜய்59 படத்திற்கு இன்னும் டைட்டிலும் கிடைக்கல, ஹீரோயினும் கிடைக்கல அப்படிங்குறது தான் நிஜம். இந்த விழாவில் அட்லீயுடன் தமிழ் திரைப்பட சங்க தலைவர் கலைபுலி எஸ்.தாணு உடனிருந்தார்.
0 comments:
Post a Comment