இளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரபுவின் வேடம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மூன்று வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ஒரு வேடத்தில் விஜய் சரித்திர பின்னணி கொண்ட கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. ஸ்ரீதேவி ராணியாகவும், ஹன்சிகா இளவரசியாகவும் நடித்து வரும் நிலையில் விஜய்யை ஒரு சிறந்த போர்வீரனாக மாற்றும் ராஜகுரு வேடத்தில் பிரபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. பிரபுதான் விஜய்க்கு பலவித போர்த்தந்திரங்கள், மற்றும் வித்தைகளை கற்றுத்தருவதாகவும், விஜய்க்கு எதிராக போர் புரியும் வீரராக சுதீப் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கேரளாவில் 'புலி' படக்குழுவினர் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளனர். இதை அடுத்து வெளிநாட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என்றும், தகவல்கள் கூறுகின்றன.
சிம்புதேவன் இயக்கும் 'புலி' படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணியை செய்கிறார். இந்த திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார்.

0 comments:
Post a Comment