Wednesday, February 25, 2015

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு நேற்று வளைகாப்பு நடைபெற்றது. ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தொழிலதிபர் அஸ்வினை மணந்த அவர், அதன் பிறகு ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கினார். இந்தப் படம் மூலம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்டரிங் 3 டி படத்தை இயக்கியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

திரையுலகில் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக குழந்தைப் பெறுவதை தள்ளிப் போட்டு வந்தார் சவுந்தர்யா. கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இதனைக் குறிப்பிட்ட தந்தை ரஜினி, முதலில் குழந்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கிய பிறகு என்ன சாதனைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என அறிவுரை கூறினார். இப்போது சவுந்தர்யா தாய்மைப் பேறு அடைந்துள்ளார். அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, சவுந்தர்யாவை ஆசீர்வதித்தனர். 

0 comments:

Post a Comment