Saturday, February 28, 2015


நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள ஹீரோயின் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ள மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க ஆண்ட்ரியா, அஞ்சலி என இரண்டு நடிகைகள் பரிசீலனையில் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ராம் இயக்கத்தில் 'தரமணி'யில் நடித்து வரும் ஆண்ட்ரியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அஞ்சலிக்கும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நா.முத்துகுமார் பாடல்கள் எழுதுகிறார். ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் எடிட்டிங் செய்யவுள்ளதாகவும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் ராம் இயக்கி வரும் 'தரமணி' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment