கடந்த 5 ஆம் திகதி வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் அனைத்து மீடியாக்களினாலும் பொசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதுடன் வசூலிலும் குறைவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வருடம் வந்த படங்களில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களின் கையை கடிக்காது ஓடும் ஒரே படம் என்னை அறிந்தால் மட்டுமே!!
வெளியாகி அடுத்தவாரம் தனுஷின் அநேகன் வந்தபோது தமிழகத்தில் சற்று தொய்வு இருந்தாலும் பெரிதளவில் பாதிப்பில்லை. தமிழகம் தவிர்ந்த இடங்களில் அநேகனால் பாதிப்பே இல்லை என்றே சொல்லணும். மலேசியா, ஐ.அ.ராச்சியத்தில் நான்காவது வெற்றி வாரமாக அஜித் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.



0 comments:
Post a Comment