Friday, February 27, 2015


தன் திரையுலகப்பயணத்தை தெளிவாகத் திட்டமிட்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நடன நடிகராக, மிமிக்ரி கலைஞனாக, தொகுப்பாளராக மெல்ல மெல்ல வளர்ந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார். 3 படத்தில் அவரது காமெடிக்குக் கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்து, காமெடி ஹீரோவாக உருவெடுத்தார். அடுத்து, காதல் நாயகனாக பயணித்து, தற்போது ஆக்ஷன் ஹீரோவுக்கான இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் காக்கி சட்டை படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் அவதாரம் நிறைவேறி இருக்கிறது.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக காக்கி சட்டை படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருப்பது ரசிகர்களை மட்டுமின்றி, மொத்த சினிமா இண்டஸ்ட்ரியையும் மலைக்க வைக்கிறது. இந்த வருடம் வெளிவந்த படங்களில் ஐ, என்னை அறிந்தால், அனேகன் படங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகி உள்ளது. அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த மான் கராத்தே படம் உலகமெங்கும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 

காக்கி சட்டை அதனையும் மிஞ்சி 700க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் 400க்கும் அதிகமான தியேட்டர்களிலும், கேரளாவில் 60க்கும் அதிகமான தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 40க்கும் அதிகமான தியேட்டர்களிலும், இந்தியாவின் மற்ற இடங்களில் 30க்கும் அதிகமான தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 200க்கும் அதிகமான தியேட்டர்களிலும் காக்கி சட்டை வெளியாகி உள்ளது. இதனால் முதல் நாள் வசூலில் தனது முந்தைய பட சாதனைகளை சிவகார்த்திகேயன் முறியடிப்பார் என்றும் எதிபார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment