Saturday, February 28, 2015

இனி இசைக்கு முழுக்கு! ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரகுமான் - Cineulagam
இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இசைக்கான பிரிவுகளில் உலகில் இவர் வாங்காத விருதுகளே இல்லை.
தற்போது இவர் சூர்யா நடிக்கவிருக்கும் 24 படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இவரின் ஜெய்ஹோ என்ற ஆவணப்படம் அமெரிக்காவில் வெளிவந்தது.
இதற்காக நியூயார்க் சென்ற ரகுமான் அங்கு அளித்த பேட்டியில் ‘எனக்கு ஒரே மாதிரி இசையமைத்து கொண்டு மட்டும் இருக்க விருப்பம் இல்லை, அதனால் இனி திரைக்கதை எழுதுவது மற்றும் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.
ரகுமான் பேசியதை கேட்ட பலரும் இனி இசைக்கு முக்கியத்துவம் தரமாட்டாரா? என்று கமெண்ட் அடித்ததாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment