Saturday, February 28, 2015

விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என ஹீரோக்களும் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் போன்ற ஹீரோயின்களும் சொந்த குரலில் பாடல் பாடுகின்றனர். இயக்குனர்களை பொறுத்தவரை நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், சேரன், அமீர், பேரரசு என பலரும் நடித்து வருகின்றனர். கவுதம் மேனன் அவ்வப்போது தனது படங்களில் ஒன்றிரண்டு சீனில் மட்டும் தலைகாட்டி வந்தார். உப்பு கருவாடு படம் மூலம் அவரை பாடகராக்கி இருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.

அபியும் நானும், பயணம், மொழி போன்ற படங்களை இயக்கிய ராதாமோகன் இதுபற்றி கூறும்போது, ‘‘கவுதம் மேனன் நல்ல பாடகர் என்பது எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். பார்ட்டிகளில் அவர் பாடுவதை கேட்டிருக்கிறேன். நான் இயக்கும் படத்தின் இசை அமைப்பாளர் ஸ்டீவ் வட்ஸும் கவுதமுக்கு நல்ல நண்பர். அவர்தான் கவுதமை பாட வைக்கலாம் என ஐடியா தந்தார். இதுபற்றி கவுதமிடம் கேட்டபோது ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் இயக்கிய என்னை அறிந்தால் படம் ரிலீஸில் அவர் பிஸியாக இருந்ததால் முதலில் ஸ்டீவ் அப்பாடலை பாடினார். அதன்பிறகு அதேபாடலை கவுதம் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டது‘ என்றார்.


0 comments:

Post a Comment