
கடற்கரையைக் காணாத சாலக்குடி சாரல்
GK சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் வெளிவர தயாராகி வருகிறது ‘பட்ற’ திரைப்படம். அறிமுக நாயகன் மிதுன், அறிமுக நாயகி வைதேகி, சாம் பால் என புதியவர்கள் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்த இளைஞர்களை ஆக்கத்திற்கு மாறாக அழிவிற்கும் பயன்படுத்தும் சமுதாய இன்னல்களை பற்றி எடுத்து கூறும் படம் ‘பட்ற'. தனது ஷூட்டிங் அனுபவத்தை கூறுகிறார் கதாநாயகி வைதேகி.
“இப்படத்தில் நான் ஒரு கல்லூரி செல்லும் பெண்ணாக வருகிறேன். எனக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. பரதம், கேரள நாட்டியம் என மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
எனக்கு ஜோடியாக வரும் கதாநாயகன் மிதுன் நன்றாக நடித்துள்ளார். எனது பள்ளி பரீட்சைகள் பொழுது ‘முன் காமம்’ என்ற காதல் பாடலின் ஷூட்டிங்கும் வேகமாய் நடந்த வந்தது. இரண்டையும் மேனேஜ் செய்வதற்கு மிகவும் சிரமமாய் இருந்தது.“
‘பட்ற’ படத்தில் நடித்தது புதிய அனுபவங்களை தந்தது. என்னதான் நான் கேரளவில் இருந்தாலும் இது வரையில் நான் கடற்கரை பார்த்ததே இல்லை. எங்க அப்பாவிற்கு கடல் என்றால் பயம் அதனால் என்னை கடற்கரைக்கு அழைத்து சென்றதேயில்லை. பாண்டிசேரியில் நடந்த ‘பட்ற’ படத்தின் ஷூட்டிங் அன்றுதான் நான் ஒரு கடற்கரை எப்படி இருக்கும் என்று பார்க்க முடிந்தது."
ஒரு நடிகையை இருப்பதால்தான் நிறைய இடங்களுக்கு செல்ல முடிகிறது. இதற்காகவே நான் பெரிய நடிகையாக வேண்டும் அதற்கு நன்றாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் வளர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு நன்றி” ஆச்சர்யம் கலந்த உறுதியுடன் கூறினார் நாயகி வைதேகி.
0 comments:
Post a Comment