விஜய் சேதுபதி என்றாலே “அடக்கம் அமரருள் உய்க்கும்...” என்ற திருக்குறள் தான் ஞாபகம் வரும், அந்தளவுக்கு அமைதியாக இருப்பார் அவர். ஆனால் இப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் சென்ற வருடம் ஒரு புயல் அலை வீசி அடங்கியது, வசந்த குமாரன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதன்பின் அந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த விஜய் சேதுபதிக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டேயிருந்தன, ஒரு பக்கம் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் புலம்பிக் கொண்டிருக்க, மறுபக்கம் விஜய் சேதுபதியோ எனக்கு கொலை மிரட்டல் விட்றாங்க என்று சொல்லும் அளவுக்கு பிரச்சனை முத்திப்போனது. இதனால் வசந்தகுமாரன் படம் கைவிடப்பட்டதாக அனைவரும் எண்ணிவிட்டார்கள்.
ஆனால் தற்போது மீண்டும் வசந்தகுமாரன் படத்தை தூசி தட்டி மீண்டும் எடுத்திருக்கிறார்கள். திட்டமிட்டபடி விஜய் சேதுபதியெ நாயகனாகவும் படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனமே தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த படம் 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதிய கதை என்பதால் விஜய் சேதுபதியின் தற்போதைய ஸ்டார் நிலையை பொறுத்து கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறாராம் இயக்குநர் ஆனந்த் குமரேசன்.
0 comments:
Post a Comment