நான் மறுபடியும் ரெடி, கூப்பிட ஆள் இல்லையே: ஜெனிலியா
நான் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் வாய்ப்புகள் தான் இதுவரை கிடைக்கவில்லை என்று நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார். ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி என்ற அப்பாவி பெண்ணாக நடித்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஜெனிலியா. இந்தியில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் ஜானே து யா ஜானே நா. அவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்களில் நடித்துள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் ஜெனிலியா.
திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்கவில்லை. அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டதால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதை ஜெனிலியா மறுத்துள்ளார்.
ஜெனிலியா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ரியான் என்று பெயர் வைத்துள்ளனர்.
12 ஆண்டுகளாக நான் தொடர்ந்து ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் திருமணத்திற்கு பிறகு சற்று ஓய்வு எடுத்துள்ளேன். என்னை நடிக்க வேண்டாம் என்று என் கணவர் ரித்தேஷ் கூறவில்லை என்று ஜெனிலியா தெரிவித்துள்ளார்.
நான் மறுபடியும் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றார் ஜெனிலியா.
நான் பாலிவுட்டிலும் நடித்தேன், தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தேன். நான் நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வந்தேன். நான் புகழுக்கு பின்னால் ஓடவில்லை என்றார் ஜெனிலியா.
0 comments:
Post a Comment