Thursday, February 26, 2015


பிரதாப் போத்தன், ஸ்ரீநாத் பாசி, நடித்த 'ஒன்ஸ் அப்பான் அ டைம் தேர் வாஸ் எ கள்ளன்' (Once Upon a Time There Was a Kallan) என்ற மலையாள படத்தின் இந்தி ரீமேக் விரைவில் உருவாகவுள்ளதாகவும் இந்த ரீமேக் படத்தை பிரதாப் போத்தன் இயக்கவுள்ளதாகவும், அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் இணையதள செய்திகள் கூறுகின்றன.

மலையாளத்தில் நடிகை ஸ்ரீலட்சுமி ஸ்ரீகுமார் நடித்த முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் பிரபல நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை இன்னும் சில நாட்களில் பிரதாப் போத்தன் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

பிரதாப் போத்தன் ஏற்கனவே மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தண்டன், சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. 20 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராக ரீ எண்ட்ரி ஆகிறார் பிரதாப் போத்தன்.

0 comments:

Post a Comment