யூ ட்யூபில் இப்போதும் அந்த ஆடியோ பதிவு இருக்கிறது. ஒரு ஹீரோ தமிழகத்தின் பிரபல பெண்மணியிடம் தாறுமாறாக உருமிக் கொண்டிருப்பார். பெண்ணை பெற்றுவிட்ட அந்த அம்மாவும், வேறு வழியில்லாமல் இவரை சமாதானம் செய்து கொண்டிருப்பார். அப்போது ஹீரோவின் கை ஏறியிருந்த நேரம். இப்போ? ஆடியோ பதிவு அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ஹீரோவின் குரலில்தான் நிறைய இறக்கம்.
அன்று அவர் எகிறிய அந்த பெண்ணின் சகோதரிதான் இன்று முன்னணி பட நிறுவனம் ஒன்றின் தென்னிந்திய பொறுப்பாளர். நம்ம ஹீரோ நடிச்ச இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இரண்டையுமே விலை கேட்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம். ஏன்? ஒன்று இவர்கள் சொல்லும் குதிரை விலை. இன்னொன்று… அவர் நடித்த படங்கள் எதுவும் சமீபகாலத்தில் பெரிய வெற்றியை தொடவேயில்லை. அது மட்டுமா? நான்தான் சூப்பர் நடிகர் என்றெல்லாம் இவரே இவர் நிழலிடம் சொல்லி வந்ததை இப்போது அந்த பாவப்பட்ட நிழல் கூட மதிப்பதில்லை. இந்த நேரத்தில் யார் இவர் படத்திற்கு அவ்வளவு விலை கொடுக்கப் போகிறார்கள்?
அதுமட்டுமல்ல, தானே இயக்கி, தானே நடித்து ஒரு படத்தை ரசிக மகா ஜனங்களுக்கு தர வேண்டும் என்று நினைக்கிறாராம் ஹீரோ. ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் ஷுட்டிங் வரும் வழக்கமுள்ள இவரை நம்பி யார் டைரக்ஷன் பொறுப்பை தருவார்? எல்லாவற்றுக்கும் விடைதேடிதான் அந்த சகோதரியை நாடினாராம். அவரது ஈ மெயில் முகவரிக்கு இவர் ஒரு விண்ணப்ப கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல். அதில், நான் உங்க நிறுவனத்திற்கு படம் பண்ணி தர்றேன். ஆவண செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம். முடிவு சகோதரி கையில். பழைய நினைவுகள் அழிந்து போயிருந்தால் ஹீரோவின் ஆசை நிறைவேறலாம்.
ஆனால் அவ்வளவு சீக்கிரம் அழியக் கூடிய வார்த்தைகளா அவையெல்லாம்? அதைவிட அதை யூட்யூபில் வெளியிட்டாரே, அதைதான் மன்னிப்பார்களா?
இருந்தாலும் பதிலுக்காக ஹீரோ வெயிட்டிங்… அதைவிட ஆர்வமாக இன்டஸ்ட்ரி வெயிட்டிங்!
0 comments:
Post a Comment