Thursday, February 26, 2015


வனவிலங்குகளை வேட்டையாடியது மற்றுமம், ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 3ம் தேதிக்கு, ஜோத்பூர் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு, சல்மான் கான், கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் படத்தின் சூட்டிங்கின் இடையே, ஷிங்காரா வகை 3 மான்கள், பிளாக்பக் வகை மான் வேட்டையாடியது தொடர்பாக, சல்மான் கான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு, இன்னும் தீர்வு காணப்படாமல், ஜவ்வாக இழுத்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment