சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். ஸ்ரீதேவி, சுதீப் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் ஸ்ரீதேவிக்கும், சுதீப்பிற்கும் முத்தக்காட்சி இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து சுதீப்பிடம் கேட்டதற்கு, படத்தில் அப்படி ஒரு காட்சி இல்லவே இல்லை என்று மறுத்துள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகள் எங்கிருந்துதான் பரவுகிறது என்று தெரியவில்லை என அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சதுரங்கவேட்டை பட நாயகன் நட்ராஜ்.
இச்செய்தி பற்றிய தங்களது கருத்துகளை கீழே பதிவு செய்யவும்
0 comments:
Post a Comment