மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சினிமா பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பில் கன்னடத்தில் வெளியான திரைப்படம் மைத்ரி. இப்படத்தில் தன்னுடைய வேடத்திற்கு மோகன்லால் கன்னட மொழியிலேயே பேசி இருந்தார்.
இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த மலையாள டப்பிங்கில் புனித் குமார் தன்னால் மலையாளத்தில் பேச முடியாது, மலையாளம் ரொம்ப கடினமான மொழி என்று கூறியுள்ளாராம்.
அனேகமாக இப்படம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment