Thursday, February 26, 2015


கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன், நடிகரும் பிரபல இயக்குனருமான பார்த்திபனை நேரில் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் முடிவில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை பார்த்திபன் தொகுத்து வழங்குவார் என செய்திகள் கூறுகின்றன. பார்த்திபன் உலகநாயகனின் தீவிர ரசிகர் என்பது மட்டுமின்றி, மேடையில் வித்தியாசமான கோணத்தில் பேசும் திறன் படைத்தவர் என்பதால், இந்த விழாவையும் அவர் வித்தியாசமாக தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் ஏழு அற்புதமான பாடலை கம்போஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், ஊர்வசி, நாசர், ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

0 comments:

Post a Comment