Wednesday, February 25, 2015

கைவிடப்பட்ட படத்தில் மீண்டும் நடிக்கும் விஜய் சேதுபதி - Cineulagam


நடிகர் விஜய் சேதுபதியின் கடைசி சில படங்கள் சரியாக போகாததால் தன்னை நிலை நிறுத்தி கொள்ள படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே ஸ்டுடியோ 9 தயாரிப்பில் வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் தயாரிப்பாளரிடம் விஜய் சேதுபதிக்கு பிரச்சனை ஆனதால் விஜய் சேதுபதி நடிக்க மாட்டேன் என்று இருந்தார்.
அவரும் விஜய் சேதுபதியால் என் நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி ஸ்டுடியோ 9 யுடன் சமரசமாகி கைவிடப்பட்ட வசந்தகுமாரன் அப்படத்தில் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.

0 comments:

Post a Comment