Saturday, February 28, 2015

ராதா மோகன் தற்போது இயக்கி வரும் படம் உப்பு கருவாடு. இந்த படத்தில் கருணாகரன் ஹீரோவாகவும், நந்திதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் எம். எஸ்.பாஸ்கர், மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புதுமுகம் ரக்ஷிதா, சரவணன் மற்றும் ‘டவுட்’ செந்தில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் நடனம் அமைக்கும் பணியுடன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரபல கிட்டார் இசைக் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார்.
ராம்ஜி நரசிம்மனின் ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் ராதா மோகனின் நைட் ஷோ பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனனை ‘உப்புக் கருவாடு’ படத்திற்காக பாடல் ஒன்றை பாட வைத்துள்ளார் ராதா மோகன். இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ராதா மோகன் கூறியிருப்பது, ‘‘கௌதம் மேனன் எனது நெருங்கிய நண்பர். அவர் பார்ட்டிகளில் எல்லாம் பாடுவதை பார்த்திருக்கிறேன். இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மேனனுக்கும் நல்ல நண்பர். அதனால் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து கௌதம் மேனனை பாட வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அவரும் மகிழ்ச்சியுடன் பாடலை பாடி கொடுத்துள்ளார். பாடலும் சூப்பராக வந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment