லண்டன் மேடையில் ஸ்லிப் ஆன மடோனா
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று இரவு பிரிட் விருதுகள் 2015 நிகழ்ச்சியின் போது நடனமாடிய பிரபல பாப் பாடகி மடோனா எதிர்பாராமல் திடீரென ஸ்லிப் ஆகி கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகின் சிறந்த பாப் இசை கலைஞர்களுக்கு வருடந்தோறும் வழங்கி வரும் பிரிட் விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாடகி மடோனா பாடிக்கொண்டே நடனமாடிக்கொண்டிருந்தபோது, அவருடன் நடனம் ஆடிய சக நடனக்கலைஞர் ஒருவர் அவரது உடலில் இருந்த கோட்டை இழுத்தபோது எதிர்பாராமல் மடோனா கீழே விழுந்தார். கோட் இழுக்கப்பட்டவுடன் அது நழுவி அவரது கையில் வரும்படியாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கோட் மடோனாவின் உடலுடன் இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததால், மடோனா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் மடோனாவுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், கீழே விழுந்ததும் ஒருசில நொடிகளில் சுதாரித்துக்கொண்ட மடோனா, நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடி, ஆடியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நடன நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுகுறித்து மடோனா வெளியிட்ட அறிக்கையில், தனது கோட் டைட்டாக கட்டப்பட்டிருந்ததால் தான் விழுந்துவிட்டதாகவும், ஆனால் தன்னுடைய ரசிகர்களின் அன்பு தன்னை தூக்கி நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment