முனி, முனி 2 காஞ்சனா ஆகிய படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் 'முனி 3 கங்கா' என்ற திரைப்படம் சமீபத்தில் 'காஞ்சனா 2" என்ற மாற்றப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் "காஞ்சனா 2" திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி கமல்ஹாசனின் உத்தம வில்லன் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'நண்பேண்டா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் ஒருவார இடைவெளியில் காஞ்சனா 2' வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
ராகவா லாரன்ஸ், டாப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் நித்யாமேனன் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸின் சகோதரர் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ராஜவேல் ஒளிவீரர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரித்துள்ளார்.

0 comments:
Post a Comment