Saturday, February 28, 2015

பாடலாசிரியர் தாமரையின் பாடல் வரிகளில் வழிய வழிய காதல் இருக்கும். ஆனால் அவரது இல்லற வாழ்வில் இருந்த காதல் இப்போதும் காதலாக இருக்கிறதா என்றால், அதுதான் பெரிய சோகம். அவர் விரும்பி மணந்து கொண்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு தாமரையை பிரிந்து பல மாதங்கள் ஆகிறது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்த பெண் ஒருவரிடம் காதல் வயப்பட்ட தியாகு, அந்த பெண்ணுடன் எங்கோ தலைமறைவாகிவிட்டதாக தகவல்.
இது தொடர்பாக தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார் தாமரை. ஆனால் யாரும் இந்த விஷயத்தில் தானாக முன் வந்து கூட பிரச்சனையை தீர்த்து தரவில்லை. வேறு வழியில்லாமல் இன்று காலை சுமார் 11 மணியளவில் தோழர் தியாகுவின் அலுவலகத்திற்கு தனது மகன் சமரனுடன் வந்து தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் தாமரை.
மீடியாக்களின் ஒட்டுமொத்த பார்வையும் இங்கு திரும்பியிருப்பதால் தோழர் தியாகு ஏதாவது பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். கடந்த பல வருடங்களாக தாமரையின் பொருளாதாரத்திலேயே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாராம் அவர். ‘எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருந்தவர் தியாகு என் சம்பாத்தியம் எல்லாம் போச்சு’ என்பது தாமரையின் அடிஷனல் குற்றச்சாட்டு.
அவர் வந்து என்ன பதில் சொல்லப் போகிறாரோ? என்ன பதில் சொன்னாலும் கட்டிய மனைவியை சொல்லாமல் விட்டு பிரிகிற கணவனின் கூற்று நியாயமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

0 comments:

Post a Comment