
தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர் என்றதும் நம் மனதில் தோன்றுபவர் கவிஞர் தாமரை தான்.
சமீபத்தில் வந்த என்னை அறிந்தால் உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
இவர் திடிரென இன்று அவரது வீட்டில் தனது கணவர் பிரிந்து எங்கோ சென்றுவிட்டார். அவர் மீண்டும் வரவேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது கணவர் தியாகு பேட்டியொன்றை அளித்துள்ளார்.
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், களப்பணிகளிலும் தொடர்ந்து பங்கெடுத்து கொண்டு தான் இருக்கிறேன்.
கடந்த 5 வருடமாக தாமரைக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் அவரிடமிருந்து பிரிந்து வாழ்கிறேன், என் மகனிடம் சில மாதங்களுக்கு முன்பு வரை மின்னஞ்சலில் பேசிக்கொண்டிருந்தேன்.
தாமரை தான் அதையும் முடக்கிவிட்டார் என்றும் மகனுக்கு கஷ்டத்தை தரக்கூடாது என்பதற்காகத்தான் ஒதுங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தாமரையுடன் சேர்ந்து விருப்பமில்லை, அவர் விரும்பினால் விவாகரத்து செய்யவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment