Saturday, February 28, 2015

சூப்பர் சிங்கரில் அந்த பாடல் பாட காரணம்? மனம் திறக்கும் ஜெசிக்கா - Cineulagam
சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர்சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் ஜெசிக்கா.
மேலும் தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தையும் ஈழத்து ஏழைக்குழந்தைகளுக்கு வழங்கி எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
ஈழத்தமிழ் சிறுமியான ஜெசிக்கா இறுதிச்சுற்றில் விடை கொடு எங்கள் நாடே பாடல் பாடி அனைவரையும் கண் கலங்கவைத்தார்.
தற்போது இந்த பாடல் பாட காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார்.
இது இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல் என்பதால் தான் பாடினாராம். மேலும் இப்பாடலை பாட வேண்டும் என்று கூறி பல ஈழத்தமிழர்கள் குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்தனராம்.

0 comments:

Post a Comment